வெயில் தரும் மரங்கள்...
அருவி வழிந்தோடியது
சுவற்றின் தொங்கிய கேலண்டரில் .....
ஈ புலியென என் ரசனை நகர
எங்கிருந்தோ வந்த பல்லி அதை
லபக் கென கவ்விக் கொன்றது.....
வெளியில் பார்க்கிறேன்.........
வறட்சியில் பட்டுப் போய் நின்றது
வீதியோர வெயில் தரும் மரங்கள்.......
பெய்தது மழை.........
ஓட்டப் பட்டிருந்த சினிமா சுவரொட்டியில்.....
அரை குறை ஆடை நடிகை மீது மட்டும்......!