தாசிப்பெண்,,

தாசிப்பெண்,,

எத்தனையோ இரவுகள்,,,
எனக்கே தெரியாமல்,,
நான் விழுந்து கிடந்த
காதல்,,குப்பை தொட்டி,,,
அவளின் இதயம்,,,

சாலையில் சிதறிய
பூக்களாய்,,,அவளது,,
வாழ்க்கை,,,சரிதை,,,

புன்னகையின் நிழலில்,,
அவளின் கண்ணீர் மழையை,,,
பொழிய மறுக்கிறாள்,,,

நேசிக்கிறேன்,,,,,,அவள்
உதிர்க்க மறுக்கும்,,அந்த
கண்ணீரின்,,ஆழங்களை,,,

தினம் தினமும்,,,
அவள் செவிகளில்,,,
ஒலிக்கும்,,காதல்
ஆபாச வார்த்தைகள்,,,

அதன் நடுவில் என்,,,
கவிதைகள் மட்டும்,,,
ஒரு துளி,,,ஆறுதலாய்,,,
நான் அவளோடிருந்த
அந்த அர்த்த ஜாமங்களில்,,,

சகித்து சகித்து
எத்தனை காதல்
குப்பைகளை தான்
சுமக்கின்றதோ,,,
அவளின்,,,பழுது
போன அந்த இதயம்,,,

ஆம்,,,அப்படி பார்த்தால்
அவளும்,,,ஒரு,,தாய்தான்,,,

நெறிகெட்ட
சமுதாயத்தின்,,,
அங்க பாசிகளை
தீர்க்கும்,,,காதல்
தாய்,,
காசு வாங்கி
கொண்டாலும்,,,

அனுசரன்,,,,,

எழுதியவர் : அனுசரன் (4-Oct-12, 9:21 pm)
பார்வை : 141

மேலே