ஓநாய்கள் நறுக்கிய வெங்காயங்கள்
நறுக்கப் பழகாமல் நறுக்கி
நகம் வெட்டுண்ட ரத்தக் கரையோடு
குப்பைத் தொட்டியில் தக்காளி.......!
அரைகுறை வைத்தியதியர்களால்
அவசரப் பட்டு அறுக்கப் பட்டு
சிசேரியனில் செத்துப் போன சின்ன மழலை...
வெட்டுப் பட்டது என்னவோ தக்காளி
அறுபட்ட தாயின் வயிறு அழுதது
ஓநாய்கள் நறுக்கிய வெங்காயத்தால்.....!