ஒரு பார்வை ஒரு அர்த்தம்,,,,,

ஒரு பார்வை ஒரு அர்த்தம்,,(சிற்றுண்டி சிறுகதை)
============================================

காற்று வீசிய தருணங்களில் மட்டும்,,
நீ ஏன் வெளியே வருகிறாய் என்று கேட்ட பொழுது
சிறிதாய் புன்னகைத்தாய்,,,
புரியாமல்,,நானும்,,புன்னகைத்தேன்,,,,

உன்னை தினம் தினம் ரசிப்பதற்கு வேண்டியா
இப்படி செய்கிறாய்,,,
என நானே என்னை பல முறை,,,கேட்டிருக்கிறேன்,,,,,

மழைத்துளி பட்ட உன் ஈரபுன்னகையில்,,,,
என் மனது காய்ந்ததடி என்னவளே,,,
காய்ந்து கிடந்த
ஆடை உலர்த்தும் கொடி
உன் கைகள் பட்டு
உயிர் பூத்ததென்னவோ தெரியவில்லை,,,

தென்றல் தழுவிய உன் ஈரக்கூந்தலின் நடனமதில்,,,
நான் நாதியற்றவனாய் போகிறேன் சொர்கத்திற்கு,,,பலமுறை,,பலமுறை,,

சோப்பு தீர்ந்த பின்பும்,,,
அருகிலேயே அங்காடி இருந்தும் போக மறுக்கிறது
என் பாழாய் போன மனது,,,,
மூன்று தெருவை தாண்டி,,,இருக்கும்
உன் அண்ணனிடம்,,போக சொல்லுகிறது,,,
என் கவனம்,,,,ஆம்,,உன்மேலுள்ள என்,,கவனம்,,,

போர்வையாய்,,ஒரு பார்வை பார்ப்பாய்,,,
பேச்சு முழுக்க அவனோடிருந்தாலும்,,,
என் பார்வை அறையின்,,,வெளிச்சம் முழுவதும் நீயாகவே இருந்தாய்,,,

வெள்ளிக்கிழமை ஆயிற்றே,,,
கோயிலுக்கு போலாமா,,என்று
நண்பர்கள் அழைத்த பொழுதும்,,,
விகல்பமாய்,,உதாசீன படுத்தியவன்,,,
இன்று தினம் தினம் கோயில் வாசலில்,,,
பிச்சைகார அவதாரம் எடுக்கிறேன்,,,
முழு நேர உன் பார்வை பிச்சைக்காரனாய்,,,,,
என்னை கேலியாய் கிண்டலாய் பேசிச்செல்லும்,,
அதே நண்பர்கள் மத்தியில்,,,,

உன் ஓரிரு பார்வையால்
என்னை பைத்தியக்காரன் போல் செய்யும்,,,
உன் காதல் பார்வையின் அர்த்தம் தான்
என்ன,,,,,

மாப்பிள்ளை வீட்டார்,,,,
உன்னை காணவந்தபோதும்
பதில் கூற மறுத்த நீ,,,
எதிர்பார்த்து நின்றது
என் வீடிருக்கும்
திசையை நோக்கி,,,மட்டுமேதானடி
ஒளிந்து பார்த்து,,,ரசித்திருந்தேன்,,,
நீ எனக்காய் என் வரவுக்காய்
துடிப்பதை அறிந்து நான்,,,

ஏழை என்னை ஏன் எதிர்பார்க்கிறாய்,,,
என்று கேட்டுவிடத்தான் ஆசை,,,
உன் மனது என் குசுருதியில்,,
புண்பட்டுவிடுமோ,,,,என்று நினைக்கையில்,,,
நான் அச்சப்பட்டு அழுதுவிடுகிறேன் நித்தம்,,,

பார்த்து பார்த்து தான் இத்தனை நாள்,,,
என்னை பைத்தியமாக்கினாய்,,,,,
நீ மின்னலாய் வீசிச்சென்ற
உன் ஒவ்வொரு பார்வையிலும்
நான் அர்த்தமற்றுதான் போகிறேன்,,,
இனியாவது உணர்த்திவிடு,,,
இந்த உன் பார்வைகளின் அர்த்தங்களை,,,
என்னிடத்தில்,,,, தெளிவாய்,,,,

பூக்காரன் கவிதைகள்

எழுதியவர் : அனுசரன் (6-Oct-12, 2:04 am)
பார்வை : 599

மேலே