என் விழிகளே,, நீ மூடிவிடு,,,

என் விழிகளே,, நீ மூடிவிடு,,,

வேகமாக சென்று வீடு போய் சேர் என்பது போல
சுழன்றடிக்கும் காற்று ,,,,சொல்லாமல் சொல்கிறது எனக்கு,,,,

இத்தனைக்கும் இடையில் நான் மழைத்துளிகளை முத்தமிட்டவாறு மெதுவாக நடந்து செல்கிறேன்
என் காருக்குள்,,,

இதுவரை என்னை பார்த்திடாத அந்த நிலவு முகம்,,,

காரிருள் சூழ்ந்த நிசப்த வேளை,,
சூரியனும் சந்திரனும்,,ஒரு சேர இருந்த,,,அம்மாவாசை இருட்டில்,,,தவளைகள் சத்தம் கூட ஒய்ந்துரங்கிய
நேரம்,,,,என் இதயம் மட்டும்,,சத்தமாய்,,
துடிப்பதேனோ,,,???,,,

நல்ல மழை,,,,மழையை யாசிப்பேனா,,,???

இல்லை உன் கால்களது மழை சாரல்,,,தட்டிய நடையில்,,,விளையாடும்,,, உன் அழகை,,,யாசிப்பேனா,,,???

என்னை காணாத அவளை,,நான் காணும்,,விதிக்கு பெயர்தான்,,,ஊடலா,,

என் கார் கதவுகளுக்கும்,,,என் இந்த ஏக்கங்களில்,,,
சிறிதளவு,,,பற்றிகொண்டதோ,,என்னவோ தெரியவில்லை,,,,நான் எத்தனை முயன்றும் அவைகள்,,,திறந்து எனக்கு பாதை கொடுக்க,,மறுப்பதுதான்,,ஏனோ,,,???

யாரடி அது இதுவரையிலும் கண்டிராதா,,முகமாய்,,,நீ,,,

தேவதை என்றால் சிறகுகள் இருக்கும் உன்னிடத்தில்,,,சிறகுகளும் இல்லையே,,,
ஐயோ,,உன்னை கண்ட என் கண்களும் இதயமும் அல்லவா,,சிறகடித்து,,பறக்கிறது,,,,,,

தூறலாய்,,அவளை தொட்டுத்தழுவும் மழையே,,,இப்பொழுது உன்மேல் அல்லவா,,
என் கோபம் முழுவதும்,,,,

அவளை அள்ளி ஆட்கொள்ளவாவது ,,,
நான் நீயாய் இருந்திருக்க கூடாதா,,,
இந்த ஒரு நொடிக்காவது,,,,ஏன் இந்த,,,
எண்ணம் கலங்கிய ஆத்திரம் உன்மேல்,,,
இதுவரை உன் நல்ல நண்பனாய்இருந்த
எனக்குள்,,,அவளை கண்டதும்,,,மட்டும்,,,,

என் இளமைகளை,,,ஆட்கொண்டு விட்டாள்,,,,
அவளின் இதய கபட நாடகத்தினால்,,,

இயந்திர உலகின் சத்தத்தின்,,,
மத்தியில்,,,இன்று மட்டும்,,,
இந்த நிசப்தம்,,,இங்கு ஏனடி,,,,
அதில் உன் கொல்சுகளின்,,,,
சப்தம்,,,,மட்டும்,,,என் செவிகளில்,,,
சாய்வதேனோடி,,,??? ப்ரியசகி,,,

எங்கோ ஓரமாய் இருந்துகொண்டு,,,
உன்னிடம் நெருங்காமல்,,,நான்
உன்னை,,,ஏங்க ஏங்க ரசிக்கும்,,
ஒரு மந்திர பொம்மையானாய்,,,நீ,,
இந்த இரவின் மடியில்,,,

இப்படியும் எனக்குள்,,
ஒரு ரசனை,,,வரமா,,???,,,என்பதை,,,
உன்னை ரசித்த பொழுதில்,,,தான்
உணர்ந்திருந்தேன்,,,,சாபம் பெற்ற
ஒரு பாவியாய்,,,நான்,,,இன்று,,,

வான வில்லில் நிறமெடுத்து,,,
தூரிகையில் நான் தொடுத்து,,
நான் வரைந்த காட்சியிது,,,
வானுயர்ந்த கோலமிது,,,
நான் உணர்ந்த பாடமிது,,,

அனுசரன்,,,,,

எழுதியவர் : அனுசரன் (7-Oct-12, 1:03 pm)
பார்வை : 376

மேலே