[348] குறு குறுப் பாக்கள் (15)
இலங்கை அரசுடன்
தொடர்ந்து
பேசி வருகிறோம்..
இன்னும் சில தமிழர்கள்
இருப்பதால்...
------- ! -------------------- ! --------------!
அவல் வேண்டுமானால்
தருகிறேன் கண்ணா!
காவிரியில்
அலைபுரண்டு நீர் வர
அருள்செய் கிருஷ்ணா!
------ ! --------- ! ---------------! ---------!
செய் அல்லது செத்து மடி!
செய்தது காந்தி
அஹிம்சை மடி!
சேமிக்க மறந்து வாழுவாய்!
சேரா தவற்றை வேண்டுவாய்!
போராட்டத்தை விரும்பினால்
புரட்சியை மட்டும் விட்டுவிடு!
புதிதாய் ஒருவழி தேடிவிடு!
மாற்றித் தேடி உழைக்காமல்
மாற்றம் கூடி வாராது!
ஊற்றும் தோண்டா தேழுந்திடுமோ?
ஆற்றல் வீணாய்ப் போகாமல்
அனைவரும் மாற்றம் தேடுங்கடா!
--------- ! --------------- ! ----------------! ---------!

