எங்கே அவள்

என் இன்ப நேரங்களில் மகிழ்ந்திருந்து
என் துயரங்களை தன்துயரங் களாய் எண்ணி
எனக்காக கால்கள் நடந்து தேய்ந்து. -எனக்காகவே
தனது இதயம் துடித்து துவண்டவள்


என்னை த் தூக்கிச சுமந்து வளர் த்தவள் எங்கே ?
என் மூச்சாய் வாழ்ந்திட்ட சுவாசம் எங்கே?
என்னை தேடி நடந்த கால்கள்எங்கே? இங்கே?
என்னைச் சுமந்தவளை நான் சுமந்தேன் எங்கே?

என்னை நெஞ்சில்சுமந்துவாழ்ந்து வந்தவளை
தூக்கிச் சுமந்து வந்திட முடியாமல்
மனதில் மட்டும் தூக்கிச் சுமந்து வந்தேன்
வெய்த்த இடத்தில் அவளைக் காணோம எங்கே ?

மண்ணில் விதைத்த விதை முளைக்கிறது
குழியில் நட்ட செடியும் வளர்கிறது
நாலு பேர் சாட்சியுடன் பத்திரமாய் பெட்டியில்
மண்ணைப் போட்டு மூடிய அவள் எங்கே?

எழுதியவர் : டாக்டர் kumar (6-Oct-12, 9:24 pm)
சேர்த்தது : Drkumar234
Tanglish : engae aval
பார்வை : 179

மேலே