வெளி நாட்டுப் பயணி
வீட்டை க்கூடாக்கி முதுகில் சுமந்து
எண்ணாத எண்ணமெல்லாம் மனதில் பதித்து
கற்கால நாடோடிகலாய் மனம் போல் திரிந்து
பரதேசி போல் வாழும் பணக்கார ஏழை
கற்காலம் நோக்கி தற் காலம் ஓட
எதிர் காலம் தெரியாமல் கலி காலம் நிற்க
எது காலம் எனத் தெரியாமல் சமுதாயம் தேம்ப
கரை தேற வழி இன்றி நிற்கின்றோம்