நீ இருந்தால் போதுமடி
உலகத்தின் செல்வமும் பேரோடும் புகழுடனும்
பெற்றோரும் உற்றோரும் சுற்றமும் சூழ்ந்திருந்தும்
நினைத்தது கிடைத்து சுகத்தோடு சுகித்திருந்தும்
வாழ்நாள் நீண்டிருந்தும் நீஇல்லாமல்பயன் என்ன ?
காண்போர் மதித திட அறிவின் பெருக்கமும்
நினைத்ததை முடிக்கும் ஆற்றலின் சிகரமுமாய்
நோய்கள் நெருங்காது வாழ்வின் பயனெல்லாம்
முழுமையாய் கிடைத்தாலும் நீயின்றி பொருளென்ன ?
அத்தை மடி மெத்தையடி அன்னைமடி சொந்தமடி
வந்ததெலாம் சென்றதடி மின்னலாய் மறைந்ததடி
ஆயிரந்தான் இருந்தாலும் நீமட்டுமே சொந்தமடி
எதை த் தான் இழந்தாலும் நீ இருந்தால் போதுமடி
அன்பு தந்த உறவெல்லாம் நஞ்சு கக்கி பிரிந்ததடி
உதவி பெற்ற நடப்பெல்லாம் உதறிவிட்டுப போனதடி
பெற்றெடுத்த தொப்புள் கொடி தொட்டிலோடு நின்றதடி
விரும்பி நிற்கும் பொற்றொடியே காடு வரை வருவாயோ ?