சமுதாய அவலம்
அன்று தொட்டில் கட்டிய கயிற்றால்
இன்று தூக்குப் போட்டுசெத்தாள் தாய்
மருமகள் கொடுமை!
தொப்புள் கொடிஉறவை தாலிக்கொடி வெல்ல
தொட்டில் உறவை கட்டில் வென்றதடி
காலத்தின் கொடுமை!
முந்தாணை ப் பிடித்து சுற்றித்திரிந்த மகள்
முந்தாநாள் கணவனால் பேசவும் மறுக்குதடி
பாசத்தின் வலிமை
கட்டிலில் தந்தையை தலையணை அழுத்திக் கொன்றான்
கட்டிலைத் திருப்பி பாடை யாய் கட்டினான்
சொத்தாசை கொண்ட மகன்
வாயைககட்டி வயிற்றைக்கட்டி வீட்டைக் கட்டினான் தந்தை
பெற்றக் கடனை அடைத்தான் மகன்
வீட்டுக் கடன் அப்படியே இருந்தது
புத்திசாலி மனிதன் ஒருவன் யாரையும் நம்பவில்லை
முதியோர் இல்லத்தில் சிறப்புவிருந்தினர்
அனுபவம் தந்த பாடம்