என்ன தடையோ ? எது தடையோ ?

கார் கூந்தலின் கருமையதன் கூடுதலால்
இரவுக்கும்,இரக்கத்தோடு இரவலாய்
பகிர்ந்தளித்திருக்கின்றாய்

புருவத்தின் கூர்மையதன் கூடுதலால்
மின்னல்களுக்கு, சின்னசின்னதாய்
பகிர்ந்தளித்திருக்கின்றாய்

சோடி கண்களின் சோதியோளிக் கூடுதலால் ..
நிலவிற்க்குபோக,கோடி நட்சத்திரங்களுக்கும்
பகிர்ந்தளித்திருக்கின்றாய்

பூவிதழின் சிறப்புச்சிவப்பின் கூடுதலால்
உலக ரோசாவிர்க்குபோக ,வறுமைக்கும்
பகிர்ந்தளித்திருக்கின்றாய்

ததும்பிடும் தனங்களின்,செழுமை கூடுதலால்
தடாகத்தாமரைக்கும்,சூரியகாந்திப்பூவிர்க்கும்
பகிர்ந்தளித்திருக்கின்றாய்

இடைக்கடுத்த தொடர், தடையில்லா வளமதன் கூடுதலால்
வாழைகளின் வம்சத்திற்கே வாரிவழங்கி
பகிர்ந்தளித்திருக்கின்றாய்

இப்படி, கூடுதலம்சங்கள் அனைத்தையும் பகிர்ந்தளித்த
பெண் பாரியே !

இதயத்தில் கடலாய்கொட்டிகிடக்கும் காதலதில்
சிறு கடுகளவும் என்னுடன் பகிர்ந்திடுவதர்க்கு
என்ன தடையோ ?
எது தடையோ ?

எழுதியவர் : (7-Oct-12, 1:02 pm)
பார்வை : 128

மேலே