ஆ ழ் கு ழா ய் - கி ண று க ள்

கூவத்துலே வீசுன
கோலி குண்டு போலே
பொத்துன்னு உளுந்திட்டேன்
போட்டு வச்ச ஆழ்குழாய்க் குள்ளே.....!

அம்மாவோட கர்ப்பமா
ஆடி நானும் மகிழ...?
அப்பப்பா பயங்கரம்
ஆயுசு முடியும் கோர நேரம்....!

கூரிய கற்கள் மொளிகளில் கீரிட
குத்திய ஆணி விழிகளை கிழித்திட
குடலுக்குள் மூச்சி கொல்வதாய் வலித்திட
குகை இருட்டிலே கொடுமையில் இருக்கிறேன்

ஆக்சிஜன் இல்லை அண்ணாந்து பார்க்கிறேன்
அம்மம்மா நீ எங்கே ? மூச்சு முட்டுதே...
செத்துப் போகவே வேளை வந்ததோ....?
காலன் எருமை நிறம்போல கருமை இருட்டு...!

டம் டம் டம் என எனது இதய சத்தம்
பயங்கரமாய் எனை பயமுறுத்த......
மூச்சி அடங்குது முணு முணுக்க தெம்பில்லை..
தொண்டை உலருது....மண் மழை தலையினில்...

தலை தூக்க முடியலே மண் மூடி விட்டது...

ஹையோ அம்மா அழாதே ப்ளீஸ்மா.....

பள்ளிக் கூடம் விட்டதும்
பறந்து நான் ஓடி வந்தேன்....

தரையில் பேப்பர் கண்டு - அதை
தாண்டாமல் மிதிச்சிட்டேன்......

தடாலென விழுந்திட்டேன் உன்னை
தவிக்க விட்டு செத்துட்டேன்....

முட்டாப்பய காண்ட்ராக்டரு
மூடியிருக்கணும் குழாயை உடனே...

பேப்பராலே மூடி வச்சி
பேயாட்டம் உயிர் வாங்கிட்டான்....

பாவமா இருக்கும்மா நீ அழுறத பாத்தா.....உன்னை
பரிதவிக்க விட்டுட்டேன் மன்னிச்சிரு அம்மா....

அப்பாவ நல்லா பாத்துக்கோ
அவர உன் மகனா நெனச்சிக்கோ......!

கர்ப்பப் பை வீக்குன்னு கவலைப் படாதே....
கட்டாயம் உனக்கு மகனா வந்து பிறப்பேன்....

அடுத்த ஜென்மத்தில்.......!

இப்படிக்கு

அன்போடு சமாதியான உன்
ஆறு வயது அன்பு மகன்.......!

எழுதியவர் : (7-Oct-12, 11:36 pm)
பார்வை : 153

மேலே