ஆகாயம் காலின் கீழே
"காதல் "
கண்கள் இரண்டை கட்டி போடும்
கனவில் நீயும் முட்டி மோதினால்
ஆகாயம் காலின் கீழே
"கவிதை "
இரவு கூட சிறகு பூட்டி நடக்க
இமைகள் கூட மூடாமல் சிலிர்க்க
பிறந்த என் கவிதை குழந்தையை
பிறர் கொஞ்சும் போது
ஆகாயம் காலின் கிழே
"நிலவு "
நீள வானில் நீந்தி குளிக்கும்
நிரந்திரமாய் இலக்கியத்தில் உவமை ஆகும்
நீள் ஆம்ஸ்ட்ரோங் தவழ்ந்த
நிலவில் நானும் நீலம் வாங்கினால்
ஆகாயம் காலின் கீழே
"பூன்னகை பூ "
எது என்று சொல்வேன் இது மலரும் தருணம்
தென்றலும் தந்தது இல்லை இது போல் மணம்
பக்கத்து வீட்டு குழந்தையின் வெள்ளி சிரிப்பில்
துள்ளி குதித்த பூன்னகை பூவை நானும் பதியம் போட்டால்
ஆகாயம் காலின் கீழே
"வாழ்கை"
நாம் கேட்க்காமலே கிடைத்த பிறப்பு
நம்மை கேட்டகாமலே நடக்கும் இறப்பு
இந்த இரண்டையும் பகுத்து ஏற்கும் மனதை
நான் பெற்றால் என்றுமே ஆகாயம் காலின் கிழே