கனவிற்கு அர்த்தம் கூறுங்கள்...
ஓடம் பழுதாகி
கரை சேர்ந்த
துண்டு மரத்தில்
ஒட்டி கொண்டிருந்தேன்
உயிரும் உடலில்
அப்படித்தான்...
இருள் சூழ்ந்து
சல சல சத்தத்தில்
துளி தண்ணீர்
என் முகத்தில் பட்டு
விழித்து பார்த்தேன்
வியப்பில் ஆழ்ந்தேன்
உயிர் போனது
என்று மூழ்கியவன்
இருளில் மூழ்கி
கொண்டிருக்கிறேன்....
அலறல் சத்தம்
அழுகை சத்தம்
குறைத்தல் சத்தம்
என்னை குலைய செய்தது
உடலை வளைய செய்தது
சத்தமிட்டேன்....
தண்ணீரை உயிர் தான்
என்றேன்...
கிடைத்தது தனிமை..
முழ்கி இருந்தால்
சேர்த்திருப்பேன் காற்றோடு
மூழ்காமல் சிக்கித்தவிக்க
என்ன பாவம் பண்ணேனோ
துளி துளியாய்
உயிர் பிரிந்தது...
கனவு கலைந்தது..
கனவிற்கு அர்த்தம் சொல்லும்
பெரியோர்களே....
இந்த கனவிற்கு அர்த்தம்
கூறுங்கள்....