ஒளிகண்ட இருள்போல்
எத்தனை அம்புகள், ஈட்டிகள்
என்னோக்கி எறியப்பட்டும்
அமைதியாகத்தானே நின்றேன்.
உன்னின் பார்வை, நேர்குரலுக்காய்
எத்தனை விண்ணப்பங்கள்? முடிவில்
கஜினி, புறமுதுகிட்டு ஓடிவிட்டான் இங்கே!
நேருக்குநேரான போரெனில்
காதல் வெற்றி பற்றி சிந்திக்கலாம்.
இது காற்றுடனான போர். தோல்விதான்.
இனி இந்தப் பூங்காற்று புயலானபின்,
பூத்த மலர்களுக்கு புண்ணியமில்லை.
மறைமுகம் இல்லையினி, நேர்முகம்மட்டுமே.
முகம் காட்டு இல்லை வீழ்ந்துபோ.
ஓடிக்கொண்டேயிருக்கிறேன் நான்,
உன்னோக்கியல்ல, எதிர்த்திசையில்.
என்னோக்கி முகம் திருப்பியநொடி,
ஓடியிருப்பேன் நான், ஓராயிரம் அடிகள்.
வெளிச்சம் வந்தபின், இருள்போல.