பரித்துசெல்ல வருவரோ !!!
மழை ஓய்ந்த மாலை
நிலவு மெல்ல எழுந்த வேலை
கீற்றுக்கொட்டகையிலும் மழைத்துளி
சொட்டியது....
குப்பை தொட்டியிலோ குழந்தையின் அழுகுரல் எட்டியது....
மழை என்றும் பாராமல் மழலையை மல்லாக்கு போட்டவள் எவளோ....
அவளும் கருவறையில் இருந்தவள் என மறந்து போனாலோ........
பாதங்கள் பல கடக்கிறது குப்பை தொட்டியை தாண்டி...
அழுகுரல் கேட்டும் ஒரு பாதமும் பதியவில்லை குப்பை தொட்டியை நோக்கி...
பூச்சிகளும் புழுக்களும் உறவாடும் இடத்தில்
புத்தம் புது ரோஜா புன்னாகிப்போகிறது
முள்ளில்லா ரோஜாதான்
பரித்துசெல்ல வருவரோ மனமுள்ள கரத்தினர்....?