விவசாயி

விவசாயி

பொய்த்து போன
வானம் கூட உனக்கான
சூரிய பிரதேசங்களில்
கயமையும் பொய்மையும்
பேசி போகிறது

உன்னதமானவனே
இப்போதெல்லாம்
உனக்கான உழவு
உன் நெற்றி ரேகை
கோடுகளாய்

உயர்வானவனே
இப்போதெல்லாம்
உனக்கான
பாசனம்
உன் உடலின்
வியர்வை மழையாய்...
முன்பெலாம் நீ

சூரியனை எழுப்பி விட்ட
சேவலுக்கு முந்தைய
கடிகார முட்காட்டி
இப்போது நீயும்
ஓய்வெடுக்க
போய் விடுகிறாய்...

திரும்பி பார்க்கிறேன்
எங்கோ ஒரு ஈன
ஸ்வரத்திலொரு
வறியவனின் ஓலக்குரல்
பொய்த்து போன
மழையை எண்ணி....

எழுதியவர் : info.ambiga (13-Oct-12, 9:53 am)
Tanglish : vivasaayi
பார்வை : 193

மேலே