ஒருவழிசொல்

என்னைத் தோல்வியுறச் செய்வதில்
அப்படியென்ன மகிழ்ச்சி உனக்கு,
எனதன்புக் காதலியே?

என் வருத்தமான, சோகமான
ஊஞ்சலில் சுகமாக, சந்தோசமாக
உன்னால்மட்டும் எப்படி ஆடிவரமுடிகிறது, என்னாருயிரே?

என்தோல்வியின் மேல்தான் உன்னின் ஆகாசக்கோட்டை அமையுமென்றால்,
அதில் எனக்கொரு அனுமதிச்
சீட்டைமட்டும் கொடுத்துவிடு.

ஒரேயொருமுறை என் கூப்பாடுக்கு,
ஒரு ஹல்லோ சொல்லிவிட்டாயானால்கூட போதும், என் இதயம் துடிப்பதை நிறுத்திக்கொள்ளுமே என்னன்பே!

இன்றைய மாலையையாவது
பூங்காற்றின் மென்மையையும்,
பூக்களின் நறுமணத்தையும்,
மனதின் புதுப்புது சங்கீதத்தையும் தொடுத்து நிரப்பிடுவாயா என் கண்மணியே!

ஓட்டையாய் கிடக்கும் இந்த உடலினுள்
ஈட்டியாய் குத்தாமல், சாரையாய்
சுற்றிப் பிணைந்து சாஸ்திரம்
உரைக்கமாட்டாயோ?

ஊஞ்சலில் நீயாட, உன் ஓரவிழியில்
நானாட, உள்ளத்தின் மையத்தில்
நம் காதலாட, கடைசி நிமிடம்வரையில்
உன்னைநான் கொன்றுகொண்ட இருக்கவேண்டும்.

ஊசலாடும் உயிர், ஓய்ந்துபோகாமல்
உடலுடன் ஒட்டிவிட உதவிடுவாயா உயிர்த்தோழியே, என்ஜென்மப்பாதியே!

எழுதியவர் : thee (13-Oct-12, 1:07 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 121

மேலே