கவிஞனுக்கு என்ன வேண்டும்?
![](https://eluthu.com/images/loading.gif)
கவிஞனுக்கு என்ன வேண்டும்?
தங்கம்.
வைரம்.
வேண்டாம். வேண்டாம்.
காகிதமும் பேனாவும் போதுமையா!
அடுத்த வேளை கஞ்சிக்கு வழியில்லை.
அது கவலையில்லை.
ஆனால் காகிதம் வாங்க கூட காசில்லையே!
ஆம். கடவுளுக்குக் கருணையேயில்லை.
புது பொண்டாட்டி சமைத்த சமையலில் உப்பில்லை.
பொறுமை காத்தான் புத்தனைப் போல்.
அவள் எழுதிக் கொடுத்த மளிகை சாமான் வரிசையில் 'சந்தி பிழை'!
பொங்கிவிட்டான் கோபத்தில் பூதத்தைப் போல்.
நீண்ட நாளுக்குப் பிறகு கவிதை எழுதிய போது,
மையான தன் கைகளைக் கண்டு
மெய்யான இன்பம் எய்தி கண்களில் கண்ணீர் கொண்டான்.
பட்டுடுத்தி நின்ற மனைவியைக் கண்ட போதும்,
பெற்றெடுத்த பிள்ளை முதன்முதலில் 'அப்பா' என்றழைத்த போதும் கூட
அவன் இவ்வளவு சந்தோஷம் படவில்லையே!
சைக்கோ என்பார்கள்.
பைத்தியம் என்பார்கள்.
பரவாயில்லை.
உண்மையை உரைத்தால் வேறு என்ன பட்டம் கிடைக்கும்?
பொய்களில் கவிதையைக் கலந்து விட்டால்,
பாராட்டுகள் லட்சம்.
கவிதைகளில் உண்மையைக் கலந்து விட்டால்,
பகைமை மட்டுமே மிஞ்சும்.
அட மூடர்களே!
கத்தியும் இரத்தமுமா கவிஞனைக் கொல்லப் போகிறது?
கொஞ்சம் அவன் கைகளைக் கட்டிவைத்துப் பாருங்களேன்.
நெஞ்சில் குத்தினால் பிழைத்தாலும் பிழைத்து விடுவான்.
அவன் கட்டைவிரலை வெட்டி விடுங்கள்.
கண்டிப்பாக உயிர் வாழ மாட்டான்.