அனாதை உள்ளம்

இடம் மாறி வந்த காதல்
இடப்புறம் சென்று தாழிட்டது.
தடம் அறிந்து வந்த சாதல்
நாற்புறமும் சுற்றி வளைத்தது.

அடைக்கலம் தந்த வார்த்தைகள்
அடையாளமின்றி தொலைந்து போனது
பூவனம் கண்ட உள்ளம்
போர்க்களம் சென்று மடிந்தது.

சத்தியமிட்ட நம்பிக்கைகள் சத்தமில்லாமல்
குப்பைதொட்டியில் குடிகொண்டது.
கத்திக்கதறிய அனாதை காதல்
மிச்சமில்லாமல் கரைந்து போனது.

மனமே! ஏன் நினைக்கிறாய் இன்னும்
கனவில் கல் எறிந்தவனை!
இதயமே! ஏன் நம்புகிறாய் இன்னும்
கண்ணில் வெள்ளம் திரட்டியவனை!

எழுதியவர் : சுமி (16-Oct-12, 9:31 pm)
பார்வை : 223

மேலே