உறவுகளை கொள்ளும் நிழல் முகங்கள் .....!
சாட்டிங்கில் இருந்தேன்
ஜொள்ளு விட்டபடி
சள்ளென்று விழுந்தேன்
சக வாழ்க்கை துணையிடம்......!
பேஸ்புக் நிழல் முகம்
பேரின்ப சுகம் தந்தது....ரத்த
பந்தமான உறவு மட்டும்
பாயிலே சுருண்டு தூங்குது.....!
எலக்ட்ரானிக் யுகத்தில்
ஏனிந்த இடைவெளி.......?
தொலை தூர உடல் தொடவே
தொடர்ந்து மனம் ஏங்குது.....!
தொட்டது கசந்து விட
தொலைத்துக் கட்ட எண்ணுது....!
இறகுகளை துண்டித்தே
இனியவானில் பறத்தல் கூடுமோ ?
இல்லறத்துக்கு கல்லறை கட்டி
இன்ப வாழ்க்கை வாழ்தல் கூடுமோ ?
கனவுகளை தேடி கசந்ததோ மேனி ?!!!
கானல் நீரை கள்ளென்று நம்பி - அமுத
கலசத்தை குப்புறத் தள்ளி........
மனிதனே மனிதனே மாறி விடடா.......!
அழகான சொந்தம் உன்
அருகிலேயே இருக்கு.......!
ஆபாசமான சாட்டிங்கை
அப்படியே நிறுத்து............!
அன்போடு வாழ்க்கை துணையோடு பழகி
அறிவான குழந்தை செல்வத்தோடு விளையாடு..!
பேஸ் புக் ஒழுங்கா பயன்படுத்த தெரியலேன்னா
மவனே / மவளே - உனக்கு
பேஸ் ஆட்டம் கண்டுரும் - தெரிஞ்சுக்கோ....!
இத்தன சொல்லியும் பாரு.........
மறுபடியும் சாட்டிங்கா.........?!
எக்கேடும் கெட்டுப் போய்த் தொல......!