சந்தர்ப்பம் என்னும் பொய் சாதகம்.
சந்தர்ப்பங்களுக்காக
காத்துக்கிடப்பதை நினைக்கும் பொது
நாமும்
சந்தர்ப்ப வாதியாய்
சமஞ்சி விடுகிறோம்
சந்தர்ப்பம் என்பதன் பொருள்
தரக்குறைவாய் இருந்தாலும்
தமக்கு தகுந்த படி
சாதகம் ஆக்குவதுதானே?
லாப நோக்கம் தானே வியாபாரம்
விலைகளை
தீர்மானிக்கின்றவனே
இரண்டு விதங்களையும்
தயார்படுத்தி விடுகிறான்
எழைக்கான சலுகையில்
குறைபாடுகளை திணிக்கின்றான்
உள்ளவன் உலவும் சபையில்
நவீனங்களை விதைக்கின்றான்
சம்பாதிக்க தெரிந்தவன்
செலவழிக்க தயங்குகிறான்
செலவழிக்க பழகியவன்
சம்பாதிப்பது பாவம் என்று பயப்படுகிறான்
ஒப்பிடும் பொது அசலை அழகில்
மிஞ்சிவிடும் நகல் ஆனால்;
விரைவில் பிஞ்சிவிடும்
எல்லோருக்கும் உண்மை தெரியும்
பொய்யும் தெரியுமென்று.
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.