"தந்தையை இழந்த மூத்த பெண்ணின் முழுக்கூற்று"

"நானும் பெண்தானே நீதி சொல்வது
யார் தானோ ?.. என்
மனம் கேட்கும் கேள்வியை உங்களிடம்
கேட்கிறேன் ..!
நேரமிருந்தால் செவி சாயுங்கள் , நித்தம்
உங்கள் அன்பால்
ஆறட்டும் என் மனக்காயங்கள் ...!

"அழகான குடும்பத்தில் முத்தான மூன்று
பெண்கள் நங்கள்..
அன்பு வேண்டுமென்றால் அன்னை
தருவாள் !.. ஆனால்
தைரியம் தர தந்தை இல்லையே
எங்களால்
விதியை வெல்ல முடியவில்லையே ..!

" சொந்தங்கள் இருந்தும் பயனென்ன ?
வறுமையில்
வாடும் போது அவர்களின் வருகை
பதிவென்ன ?...
பந்தங்கள் எல்லாம் பாசம் தந்து கண்ணீர்
துடைப்பவர்களா ?..
இல்லை கானல் நீரைப்போல
கண்துடைப்புகளா?..

"பனிமலை போல் உருகாமல் என்றுமே
அன்பெனும் கனிச்சுவை தந்தாள் ..!
தனி மரமாய் பாடுப்பட்டு எங்களுக்கு
கல்வியும் தந்தாள் -
வீணையில்லா சரஸ்வதி என் "அன்னை"..

"ஓடின காலங்கள் தரும் வானிலை மாற்றங்கள்
சூடின கல்வி தந்தது
எங்கள் வாழ்க்கையில் சூழ்நிலைமாற்றங்கள்..!
பட்டம் கிடைத்தது ஏனோ
சிறகும் முளைத்தது, வாழ்க்கை வானிலே
சில காலம் வசந்தமாய்
பறந்தேன் ..! இனி எனது வருமானம் எங்கள்
குடும்பத்தின் சுமை தாங்கும் ..

" வயதாகிறதாம் எனக்கு வரன் பார்க்கிறாள்
என்அன்னை .. பெற்றவளுக்கு
பெண்ணும் சுமை தானே கட்டியவன் இடுகாடு
போகும் வரை ?..
ஏனோ அன்னை பார்த்த வரன் எல்லாம்
நெஞ்சைக் குத்தின
நெருஞ்சி முட்கள்.. வந்தவன் எல்லாம்
கேட்க்கிறான் சில கேள்வியை -

" தந்தையை இழந்த பெண்ணோ ? இனி தனி
இவள் வருமானம் தங்குமிடம் புகுந்த
வீடா ? .. பிறந்த வீடா?..
" இளையவள் தங்கை இரண்டுபேர் !.. இனி
இவள் வருமானம் அவர்களின்
வாழ்க்கைக்கு வெகுமதியோ ?..

" பெண்கள் பிறப்பு மதிக்கெட்ட ஆண்கள்
மத்தியில் என்ன
மதிப்பு ?..சில நேரத்தில் வாழ்க்கையை
வெறுக்கிறேன், ஆனால்
வீதியோரம் மழலை புன்னகையை கண்டு
நானும் அதை மறக்கிறேன்
நமக்கும் தாய்மை என்ற கீரிடம்
இருக்கிறதென்று ...!

எழுதியவர் : dhamu (19-Oct-12, 2:36 pm)
பார்வை : 190

மேலே