சொல்லிவிடாதீர்கள் அவளிடம்...!!
காதல்வாழ தகுதிகள் தேடும் கலியுகத்தில்
தகுதிகளுடன் காதலை தொலைத்தவன் நான்...
முரண்பாடுகளைத் தீர்த்துவைக்க
முடிவுரைகள் ஏங்கிக்கொண்டிருக்க,
முடிவிலிருந்து முரண்பாட்டிற்கு
நகர்த்தப்பட்ட காதலின்
சொந்தக்காரன் நான்!!!
குருதி சொட்டும் நினைவுகளில்
தினமும் முழ்கி,
நிகழ்காலத்திலும் நினைவுகளோடே
தொலைந்து போக
வரம் பெற்றவர்களில்
நானும் ஒருவன்...
இரவிலே குழந்தைகள்போல்
தினமும் அழும் நினைவுகளிடம்
சமாதம் சொல்லி தோற்றுப்போவதே
என் வாடிக்கை....
அவள் நினைவுகளை என்னிடமிருந்து
பிரிக்க நினைப்பவர்கள் - ஒருநாள்
என்னை மனநல மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்வார்கள்...
நினைவு பிரிக்கும் முயற்சியில்,
பட்டம் பெற்ற கயவன் ஒருவன்
என்னை பாடாய்ப்படுத்துவான்...
ஆங்கில வைத்தியம் என்னிடம் தோற்கபோவதை
அவன் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை!!
குருட்டு நம்பிக்கையில் என்னை கூட்டிவந்தவர்கள்
கையேந்தி நிற்பார்கள் கடவுளிடம்!!
அவனுக்கு தெரியாதா என்ன?
என்ன என் நம்பிக்கை என்று!!
கடைசியில் நினைவு அகற்றும் பணி
உயிர்குடித்த பணியாய் இனிதே நிறைவுபெறும்!!!
நினைவு பிரிக்க பட்டம் பெற்றவன்
நினைவற்று கீழே விழ,
குருட்டு நம்பிக்கையில்
என்னைக் கூட்டி வந்தவர்கள்
யார்மீது குற்றம் சொல்லப்போகிறார்களோ???
இருப்பினும்,
சொல்லிவிடாதீர்கள் அவளிடம்
அவள் நினைவகற்றும் முயற்சியில்
என் உயிர் பிரிந்துவிட்டதை,
அவளாவது வாழ்ந்து பார்க்கட்டும்
அந்த ஆண் குழந்தைக்காக!!!
Regards,
MuSthak.