யார் அவர்?
பேசிக்கொண்டே இருப்பார்
நான் பதில் பேசுவதேயில்லை!
கேள்விகள் பல கேட்டுக்கொண்டே
இருப்பார் அவர்,
நான் பதில் சொல்லுவதேயில்லை!
தொடர்ந்து கொண்டே இருக்கும்
கேள்விகளுக்கும் முடிவில்லை,
உறவுகளை மறந்து விசாரிப்பார்,
மறந்து விடும் மறுபடியும் விசாரிப்பார்,
யார் அவர்?
அவர் முதிய குடிமகன் – மூப்பினால்
ஏற்படும் மறதி நோய்!
பலமுறை ஒரே கேள்விகளைக் கேட்டு
துன்புறுத்துகிறீர்களே என்றேன்,
இன்ப அதிர்ச்சியாய்ப் பதிலடி!
’தொன்னூறு வயது முதியவன்
பொறுப்பாக விசயங்கள் தெரிந்து கொள்ளும்
ஆர்வத்தைப் புரிந்து கொள்’ என்பார்,
அவர் பேச்சுக்கு மறுப்பேது?
அவர்தான் என் தாத்தா.
முதியவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.