(((((என் பிள்ளைநிலா )))))

தத்தி தத்தி நடைபழகும்
தங்க முயல் நீ .....

தாவி தாவி துள்ளி குதிக்கும்
புள்ளி மான் நீ ......

கொஞ்சி கொஞ்சி பேசும்
கிளி பிள்ளை நீ......

கர்வம் கொண்டு நெஞ்சை பிளக்கும்
சிங்க குட்டி நீ ........

என் கருவறை ஈன்ற
கருப்பு நிலா நீ ......

அன்னை என்ற பட்டம் அளித்த
பல்கலைக்கழகம் நீ .......

என் மார்புக்கு அழகு சேர்த்த
என் கன்று குட்டி நீ ........

என் இறைவன் (கணவன்) கொடுத்த
வர பிரசாதம் நீ .......

உன் சேட்டைகள் ஆயிரம்
அதுவே என் ஆனந்தம் ........!!!!!

எழுதியவர் : (22-Oct-12, 2:50 pm)
பார்வை : 150

மேலே