காதலும் காதல் தந்த வலிகளும்..,
ஒவ்வொரு முறையும் உன்னிடம்
ஒருவார்த்தையாவது பேச ஏங்கியிருப்பேன்..,
ஒதுங்கிச் சென்ற உன்னிடம்
ஒருநாள் பேச்சு கொடுத்தேன்..!!!
அது ஒரு சுகமான காலங்கள்..,
அதை நினைக்கும்போதே - இதயம்
அளவில்லா பரவசம் அடையும்..,
உனக்கும் இருந்திருக்கக் கூடும்..!!!
இரவுகளில் பேசிய பேச்சுக்கள்..,
இனிமையான குறுஞ்செய்தி பகிர்வுகள்..,
இதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..,
இன்பமான செல்லச் சண்டைகள்..!!!
சிலிர்க்கச் செய்த உன்னழகு..,
சிரித்துப் பேசிய உன்னுதடுகள்..,
சிந்திக்கச் செய்த உன்பேச்சு..,
சிந்திக்க மறந்த என்னுள்ளம்..!!!
காதலென்று நான் சொல்ல..,
நட்பென்று நீ சொல்ல..,
இல்லையென நான் சொல்ல..,
யோசிக்கலாமென நீ சொல்ல..,
அளவில்லாக் கணவுகள் எனக்குள்..,
அனைவரின் அன்பான வாழ்துக்களுடன்
அமைதியாக நமது திருமணம்..,
அழகான என் செல்லத்துடன்..!!!
நமக்கென்று ஒரு உலகம்..,
நமக்கென்று ஒரு வீடு..,
நமக்கென்று ஒரு குழந்தை..,
நமக்கென்று ஒரு வாழ்க்கை..!!!
அப்படி எத்தனை கணவுகள்..,
ஆறுதலாக இருந்து எனக்கு..,
அனைத்துமே நீ என்று
அளவில்லா ஆசை வைத்தேனே..!!!
இந்ந மகிழ்ச்சியான நேரத்தில்தான்
இடியாக என்னுள் விழவேண்டும்..,
இன்னொருவனை காதலிப்பதாய் சொல்லிய
இரக்கமில்லா உன் வார்த்தைகள்..??
எல்லாமே முடிந்துவிட்டதாகவே உணர்கிறேன்..,
நீ இல்லாத வாழ்க்கையை
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை..,
என்மீதுகூட கோவமாக உணர்ந்தேன்..!!!
மீண்டும் யோசிக்கிறேன்-வாழ்வில்
மீதமிருப்பது என்ன என்று..,
மீதம் ஏதுவும் இல்லை
மிஞ்சியிருப்பது உன்நினைவு மட்டும்தான்..!!!
உனக்காக ஒருமுறை யோசிக்கிறேன்..,
எனக்காக ஒருமுறை யோசிக்கிறேன்..,
நமக்காக ஒருமுறை யோசிக்கிறேன்..,
நீயில்லா வாழ்வு இருளென்று..!!!
காதலை தியாகம் செய்யலாமென்றால்
காலங்கள் தவறாகப் பேசக்கூடும்..,
காதலுக்காக உன்னை பிரிவதைவிட..,
உனக்காக உயிரைப் பிரித்துவிடலாமே..!!!
காதலுக்காக தற்கொலை செய்யவில்லை..,
காதலிக்கத் தகுதியில்லாத எனக்கு
காலம் கொடுத்த தண்டனைதான்
இந்த அவசர முடிவு..!!!
கதவுக்கு அப்பால் கேட்கிறது
ஆசைத் தங்கையின் சத்தம்..,
அவளுக்கு பதிலளிக்க நினைக்கிறேன்..,
என்னால் முடியவே இல்லை..!!!
இதயம் வேகமாகத் துடிக்கிறது..,
கைகள் மெதுவாக நடுங்குகிறது..,
கண்களில் இருள் படர்கிறது..,
நெஞ்சம் ஏனோ அடைக்கிறது..!!!
வாயில் சிறுதுளி இரத்தம்..,
மூக்கில் எப்போதோ வந்துவிட்டது..,
நான் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது
செத்துக் கொண்டிருக்கிறேன்..!!!
அடுத்த பிறவியிலாவது-நீ
எனக்கு கிடைப்பாயென்ற நம்பிக்கையில்..,
-குட்டிசரண்.