கானல் நீரான என் கனவு காதல்

அந்த ஆலமர நிழலும்
அந்தி மலை பொழுதும்
கால் நனைத்த கடலும்
கவி பாடிய கண்ணும்
நம் நினைவை பறை சாற்றும் .........
என் இதய துடிப்பை நிறுத்தி விட்டு
என் நிழலை இங்கே தொலைக்க விட்டு
கண்ணில் மையை தீட்டி
என் காதலை தூக்கி எறிந்த
என் கண்ணின் ஓவியமே
இந்த குற்றம் யாரை சாரும்?............
என் இதய கோவிலில் காதல் ஓவியம் தீட்டியதும் நீ
கலைத்ததும் நீ......
என் பார்வையை உன்னிடம் திருப்பியதும் நீ
விலக்கியதும் நீ ..........
என் உயிரின் குரலை கேட்டதும் நீ
என் உயிரையே பறிப்பதும் நீ............
போதும் பெண்ணே உன் காதல் நாடகம்
இனி நான் மட்டும் தான் என் காதல் காவலன்.....

எழுதியவர் : vanesh (24-Oct-12, 12:53 pm)
சேர்த்தது : vanesh m
பார்வை : 329

மேலே