மது விலங்கு
மது விலக்கல்ல
மது விலங்குதான்
வேண்டும் இங்கே
மனிதனுக்கு
அருந்தி அருந்தி
விலங்காக்கிப் போகிறது
மனித கூட்டம்
போதைச் சிறையில் ஏழை
மது விலங்கில்
பொண்டாட்டி பிள்ளைகள்
பாவம் தெருவினில்
காசும் பணமும்
கஜானாவில் அரசாங்கத்திற்கு
கல்லரா பெட்டியில் விற்பவனுக்கு
சரித்திரம் பழைய இரவுகளை
நோக்கியல்ல
புதிய இரவுகளை நோக்கி
நடந்து கொண்டிருக்கிறது.
---கவின் சாரலன்