வறுமை
பௌர்ணமியன்றும் அம்மாவாசை எனக்கு...
வழியில்லை வாழ்வதற்கு...!
வறுமையின் கொடுமை.
உடலும் உயிருமே
எனது சொத்து.
ஆனால் என் பெயரோ முத்து.
அனைத்தும் துறந்தவன் நான் -
உடுத்துவதற்கு கூட உடை இல்லை.
தினமும் விரதம் இருப்பேன்
கடவுள் உருவில் ஒருவர் வந்து
உணவு தரும் வரை.
வெயிலோ, மழையோ - என் வீடு
இந்த நாடு தான்...
வறுமையின் வடிவம் தெரிகிறதா
என் உருவில்,
கை நீட்டி வேண்டினேன்
எவரும் கை நீட்டவில்லை...
எங்கேயோ கேட்டது ஒரு குரல்
"தம்பி சாப்பிடுறியா"
இளைஞன் உருவில்
வந்தான் இறைவன்
கையெடுத்து கும்பிட்டேன்
"நாளைய இந்தியா நம் போல்
இளைஞர் கையில் "
எழுந்து வா ! என்றான் அந்த இறைவன் (இளைஞன்)
- கார்த்திகேயன்.V