காலாவதியான ரசனைகள்இன்போஅம்பிகா

வாழைப் பழ சோம்பேறிகள்..... உறங்கி....உறங்கி
வானத்தில் பார்க்காத விடிவெள்ளிகள்....!

லஞ்சம் பெறும் தடிமாடுகள்....மிரட்டி...மிரட்டி
லட்சியமே செய்யாத மனித நேயங்கள்....!

தேக சுக காதலர்கள்....மயங்கி....மயங்கி
தேடவே விரும்பாத இதய உணர்வுகள்.....!

பணத்தாசை பைத்தியங்கள்...விரைந்து..விரைந்து
பாசமாய் மகிழாத வாழ்வின் நிகழ்வுகள்....!

சுயநலப் பேய்கள் தினம்.... இறந்து.... இறந்து
புரிந்து கொள்ளாத பொதுநல இன்பங்கள்....!

இவை அனைத்தும்
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரங்கள் -

அப்பப்பா மனிதனின்
காலாவதியான வசந்தகால ரசனைகள்.....!

எழுதியவர் : info.ambiga (27-Oct-12, 11:08 am)
பார்வை : 244

மேலே