நம்பிக்கை

உதிரும் சருகுக்கு இருக்கிறது
காய்ந்து உரமாவோம்
என்ற நம்பிக்கை!!

மறையும் கதிருக்கு இருக்கிறது
புத்துயிர்பெற்று புலர்வோம்
என்ற நம்பிக்கை!!

வீசும் காற்றுக்கு இருக்கிறது
யாருக்கேனும் சுவாசமாவோம்
என்ற நம்பிக்கை!!

மடியும் மழைதுளிக்கு இருகிறது
என்றேனும் முத்தாய் மறுஜென்மம்
பெறுவோம் என்ற நம்பிக்கை!!

ஏ!! மனிதா!!
இவையனைத்தையும் கட்டியாளும்
உனக்கு ஏன் இல்லாமல் போனது
வாழ்வை வெல்வோம்
என்ற நம்பிக்கை!!

எழுதியவர் : (27-Oct-12, 4:12 pm)
பார்வை : 234

மேலே