காதல் சுமைதாங்கி

காதல் .......
எனக்கும் பூத்தது புதிதாய்
ஒவ்வொரு நொடியும் அவள் நியாபகம்'''
சிறு சிறு சண்டை
சுகமான கோபம்
எதையோ எதிர் பார்பேன் அவளிடமிருந்து
நான் அவளிடம் பேசாமல்
அவள் என்னிடம் பேச நினைப்பேன்
அந்த சில வார்த்தைகள் இன்றும்
என் இதய புத்தகத்தில் திருப்பப்படாத பக்கங்கள்
போதும்.........
இந்த நியாபகங்கள்
இந்த ஒரு வாழ்க்கையை
அவள் நியாபகத்தோடு வாழ.......
அவளை மறக்க நினைக்கிறேன்
அதுவும் முடியவில்லை .....
இது தான் என் வாழ்கை என மாற்றி கொண்டேன்
போகட்டும் என் வாழ்கை படிகள்
அவள் இல்லாவிட்டாலும்
அவள் நியாபகத்தோடு பயணிப்பேன்
சோகம் இருந்தாலும்கூட
ஏதோ ஒரு சந்தோஷம்
அவளை என் வாழ்கையில் பார்த்தது .....
அழுகை வந்தாலும் அதை ஏற்பேன்
அவளுக்காக தானே .....
என்றும் அவளை என் மனதில் சுமப்பேன்
இந்த சுமை தாங்கி..........

எழுதியவர் : vanesh (28-Oct-12, 8:48 pm)
சேர்த்தது : vanesh m
பார்வை : 118

மேலே