மறக்கடிக்கப்பட்டவள்............

இதமான
காற்றில்
இளகி கலைந்த
கூந்தலுடன்
ஆர்ப்பரிக்கும்
அலைகளை பார்த்து
அனைத்தையும்
மறந்தவளாய்
ஊன்றுகோலுடன் - அவள்
சிறுமி
நந்திக்கடலோரத்தில்

எத்தனை
நண்டுகள்
தலை தெறிக்க
ஓடியிருக்கும்
அவள் துரத்தலில்
இன்று ஒரு நண்டின்
துளையையே
உற்று நோக்குகிறாள்
ஆனாலும் ஓடுகிறாள்
மனப்பலத்தால்

தன் கால்த்துண்டு
மிதந்த
தண்ணீரையும்
நேசித்தே
நடக்கிறாள்
பாடுகிறாள்

அவள்
அப்பனை
கொண்டுசென்ற
அலைகள் கூட
அவளை
தழுவியே
செல்கின்றன

இரத்தத்தால்
எழுதிய
சரித்திரங்களைகூட
மறக்க வைத்த
இயற்கை
அவளுக்காக
அவள் எழுச்சிக்காக
என்ன செய்யப்போகிறது?????????

எழுதியவர் : எஸ்.வை.சசீ (28-Oct-12, 8:22 pm)
பார்வை : 119

மேலே