முக்கோண மண்டை(அதீதசிந்தனையின் அகந்தை)

தேர்ந்தகவிஞர்களின்
தேர்வறையில்
சில தேராத
தெருவாசிகள்!
மேசையின்
முன்னால் அமர்ந்து
வியாக்கியானம்
பேசும்
சிறுமைநாசினிகள்!
அகந்தை இருமாப்பு
இறைமறுப்பு
இவையெல்லாம்
சிறுமையின்
வழிநடப்பு!
அசாதாரண
வசைச்சொற்கள்
பிளப்பு!
பேனாமுள்ளினை
மழுக்கிவிட்டு
பேனாக்கூட்டை
உடைத்துவிட்டு
தான் செய்த
பிழைக்கு
தன் பேனாவுக்கு
தண்டனை கொடுக்கும்
கோண இழிப்பு!
அவற்றோடு விவாதம்
செய்தால்
நமக்குத்தான்
அவமதிப்பு!
நான் அதீத
சிந்தனை யுடையவன்
என்னால் கேட்கப்படும்
கேள்விகள்
எவராலும்
பதில்தர
முடியாதது என்ற
மறுதலிப்பு!
இவையும் சிறுமையின்
வழிநடப்பு!
போகட்டும்...அவை
காலத்தால் ஆகாத
ஓட்டை
நாற்காலிகள!
அதில் உட்கார்ந்தால்
நாம்தாம்
கீழே விழ வேண்டும்!
தேவையில்லா
சிறுமைக்குரும்பிகளை
சற்றும்
முகமெடுத்து
பார்க்க வேண்டாம்!
அகந்தைஆயுதமாய்
அது நம்
நெஞ்சினை
கிழித்துவிட்டு
போகும்!
நிம்மதியினை
கெடுத்துவிட்டு போகும்
ஆகையால்
தூக்கி.......யெறிந்து
விடுங்கள்
துச்சம்
தொலையட்டும்!
அச்சம்
கலையட்டும்!

எழுதியவர் : ருத்ரா (29-Oct-12, 7:09 pm)
பார்வை : 299

மேலே