எது சுதந்திரம்??????

பேருந்து: ஜன்னல் ஓர இருக்கை!
நீண்ட தூர பயணம்!
உடலின் வெட்பம் வியர்வையாய் வெளியேற
மெல்லிய காற்று என்னை தாலாட்டியது.

அறியாத என்னை தன் புன்னகையால்
அறிமுகம் செய்துக்கொண்டது,
என் முன் இருக்கையில்
தாயின் மடி தவழும் மழலையானது!

இயற்கையின் அழகும்,
தென்றலின் தாலாட்டும்,
மழலையின் புன்னகையும்,
என்னை எங்கோ கொண்டுசெல்ல
உடல் மட்டும் இருக்கையில்....

திடீரென, விஷக்காயை தின்றது போல
மேனியெங்கும் கசப்புத்தன்மையை உணர்ந்தேன்...
இருக்கைகளுக்கும்
கை முளைத்து விட்டனவோ? என்றெண்ணி
என் பார்வையை இருக்கைக்கும் ஜன்னலுக்கும்
உள்ள இடைவெளியில் செலுத்த....
விருட்சமாய் என்மேல் படர்ந்திருந்த விரல்கள்
மீண்டும் விதைக்குள் புதைவதை போல என் இருக்கையின் பின் மறையக் கண்டேன்...

தந்தையாய்,
தமையனாய்,
தோழனாய்,
கணவனாய்,
நான் கண்ட ஆண்களிடம் காணாத
ஓர் ஆண்குணம்!!

கோபம் கங்கையாய் பொங்கி வர
திரும்பி பார்த்து அதிர்ந்து போனேன்;
ஆணுக்கான வீரத்தை புதைத்து
கோழை கையில் ஏந்தும் ஆயுதமாய்
அவன் பாசாங்கிக்கிறான்
உறங்குவதை போல.

அன்று: ஆணின் பார்வையில் பெண் ஒரு அரியப்பொருள்!
இன்று: ஆணின் பார்வையில் பெண் ஒரு போகப்பொருள்!

சுதந்திரம்: எது சுதந்திரம்???
பெண் முன்னேற்றம் - சுதந்திரமா?
ஆண் அநாகரிகம் - சுதந்திரமா?
பொது இடங்களில் ஆணின் அநாகரிகமே
முழு சுதந்திரத்தை அடைந்திருக்கிறது!!!

திரண்டு வரும் அலைகள்
தினமும் கரையில் மிதிப்படலாம்....
ஆனால் நிச்சயம் சுனாமியாய் ஓர்நாள்
உருமாறும் என்பதே
மனதில் என்றும்
கொள்ள வேண்டிய பாடம்!!!

எல்லா பெண்ணுக்கும் உரிய அதே கோபகங்களுடன்...
- Riyathami

எழுதியவர் : ரியாதமி (29-Oct-12, 7:18 pm)
சேர்த்தது : Riyathami
பார்வை : 181

மேலே