சிறந்த படைப்பாளி

காலை பணியில் உடல் நனைத்த -புல்வெளி
கடமை தவறாச் சூரியன்
நில்லாமல் சுற்றும் -பூமி
பூமி எங்கும் பூத்துக்குலுங்கும் -வண்ண
வண்ண பூக்கள் ....................
வளர்ந்து தேயும் நிலா
கரைதொட ஓயாது முயற்ச்சிக்கும் -
கடல் அலை !!!
என்றும் என்றென்றும் தன்னிலை மாறா-
விலங்குகள் .......
இவை அனைத்தையும் ஆளும் - மனிதன்
என இயற்கையின் ஒரு ஒரு நிலையையும்
கண்டு ரசிக்கிறேன் -அதனினும்
இவை அனைத்தையும் படைத்த இறைவா!!!
உனைக் கண்டு வியக்கிறேன்!!!!!

எழுதியவர் : rajai ananthi velusamy (31-Oct-12, 7:41 pm)
சேர்த்தது : RAJAI ANANTHI VELUSAMY
பார்வை : 218

மேலே