***((( விடியும் வரை காத்திரு )))***

ஏனோ வரவில்லை
எனக்குள் உறக்கம்
ஏதேதோ கனவுகள்
எனக்குள்ளே இயங்கும்.

வேண்டாமடா உறக்கம்-இதில்
வேதனைகள் அதிகம்.
வெற்றி காணாத உறக்கம்
வெட்டு காயமாய் வலிக்கும்.

முயற்சி செய்கிறேன்
முதலில் வருவதற்க்கல்ல
முட்டி மோதியாவது-என்
முயற்சிகள் வெல்ல.!

சாதிக்க நினைக்கிறேன்-ஆதலால்
சாக்கடையிலும் மலர்கிறேன்!
சரித்திரம் பல படைத்திடவே
சலித்திடாமல் முயல்கிறேன்.

விடை தெரியாத வாழ்க்கைக்கு
வினாக்குறிகள் வேண்டாமே.!
விடியும் வரை காத்திருப்பேன்-புது
விடியலாய் நானிருப்பேன்


என் அன்பு அண்ணன் ஈஸ்வர் கொடுத்த தலைப்பில்
எழுதிய வரிகள்

எழுதியவர் : ராஜ்கமல் (1-Nov-12, 10:43 am)
பார்வை : 426

மேலே