மாலையில் காதல்

மழைத்துளிகள் மண்ணோடு காதலை பகிர்ந்து
கொள்ளும் அந்த வேலையில்
என்னை நீ விட்டு சென்றது ஏன்?
ஆதவன் தொடுவானத்தை தாண்டி பயணம் செய்து கொண்டிருக்கும் தருணத்தில்
சூரியகந்தியைப் போல
நான் தலை சாய்ந்து விட்டேன் !
விண்மீனைக் கண்டு பெண் பூக்கள்
கலையிழந்து இருக்கும் காலத்தில்
மற்ற விண்மீன்களைப் பார்த்து
நான் வாடினேன் என்
விண்மீன் இன்னும் தோன்ற வில்லையே என்று!
பறவை மழலைகள் தன கூட்டுடன் காதலை பகிரிந்து கொள்ளும் வேலையில்
நீ என் கூட்டுக்குள் காணவில்லை ?
என்னை சுற்றி மழையை அறிவிக்கும் செல்வங்களின் ராகங்கள் ஒலிக்க
எந்தன் ஒற்றைக் குரலின் சங்கீதம் காணவில்லை !
காற்றில்லா இடத்திற்கு காற்று பரவுவதை போல
எந்தன் காற்றில்லா இடத்திற்கு காற்றை காண்பிப்பாய்!
காதலியே !
நீ இல்லாமல் நான்
நிழல் இல்லா உருவமாக
மழை இல்லா மேகமாக
உயிர் இல்லா பொம்மையாக
உயிர் அளிப்பாய் என்ற ஆவலுடன் !