நீங்கள் என்னை அனுமானித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் என்னை...

அனுமானித்துக் கொண்டிருக்கிறீர்கள்
என் கவிதையிலிருந்து.

எனது....
கடவுளைப் பற்றிய கவிதைகள்...
மனிதனாய் இருப்பதைச் சொல்லும் கவிதைகள்..
சமூகத்தின் அழுக்கை வெளுக்கும் கவிதைகள்...
நாளைய உலகத்திற்கான கவிதைகள்....

எல்லாவற்றிலிருந்தும் ...
என்னை அனுமானிக்கிறீர்கள் நீங்கள்.

உங்களின்....
எல்லா வெற்றிடங்களிலும்...
என்னையே நிரப்புகிறீர்கள்.

மேலும்...
உங்களின்...புன்னகை...
கடவுள்...
நண்பன்....
எல்லாமுமாய் என்னையே
நிரப்புகிறீர்கள்.

எனக்குத்தான் தெரியவில்லை.....

என் அழுக்கின் மேல்
நீங்கள் போர்த்திய
இந்த வெள்ளை ஆடையை
என்ன செய்வது என?

எழுதியவர் : rameshalam (1-Nov-12, 9:31 pm)
பார்வை : 172

மேலே