##### உலகத்தின் கடைசி நாள் #####

கூவுகின்ற உயிரினை
கூட்டுக்குள் ஒளித்து...,,
நடுங்குகின்ற உணர்வுகளை
நடைபிணமாக்கிக் கொள்கிறேன்...!
எனக்காய் சேர்த்துவைத்த
எண்ணற்ற கனவுகளை...,,
ஏக்கங்கள் நிறைத்து
ஏமாற்றிவிடத் துணிகின்றேன்...!
உரிமைகளைக் கொண்டாடிய
உற்ற உறவுகளையெல்லாம்
உயிர்பிக்க மறுத்து...,,
உணர்வற்றுப் போகின்றேன்...!
காலங்கள் சிறிது சிறிதாய்
கல்லாக்கி கொண்டிருக்கும்
இவ்வேளையில் என்னை...,,
இரக்கமற்ற காற்றும் உரசிப்போக..,,
ஓலமாய் ஒலித்துக் கொண்டே
ஓரமாய் புன்னகை செய்கின்றது...!
ஒற்றை நாளில் நான் கண்ட
ஓயாத மரணப் புலம்பல்கள்...!
கண்கள் இரண்டையும் இறுக்கி
கவனங்கள் பலவாய் சிதறியே....,,
காட்சிக்குள் அடங்கமுடியாமல்
காண்பவர்கள் யாவருமே....!
நானும் அப்படியே என்னை
நிறுத்திக் கொண்டேன்.....,,
நாளை என் உலகமும் தன்னை
நிறுத்திக்கொள்ள போகிறதென்பதால் !!!