மனதில் இருந்தால்
ஜாதி என்ன
மதம் என்ன
நாடு என்ன
இனம் என்ன
எத்தனை பிரிவு இருந்தாலும்
எத்தனை வேதம் இருந்தாலும்
ரத்தம் சிவப்புதானே?
என்றோ இறைவனடி சேர்ந்த
ஒரு ஆத்மாவிற்காக
அடுத்து இறைவனை
சேர இருக்கும்
நாம் ஏன்
ஒவ்வொரு ஆண்டும்
அவர்தம் நினைவு தினத்தன்று
பிரச்சினை எழுப்பி
நிம்மதி இல்லாமல் சாக வேண்டும்?
இறந்தவர் தம்
சிலைக்கு மாலை போட்டாலும்
போடாவிட்டாலும் மரியாதை
மனதில் இருந்தால் போதாதா?
அதற்காக ஏன் இருப்பவரை
சாகடிக்க வேண்டும்?
(பரமக்குடி சம்பவத்தை மனதில் கொண்டு எழுதப்பட்டது)