என் வரிகளில் - என் காதலே என் காதலே (டூயட் )

என் இசையே, இன்னிசையே
என் மனம் எங்கும் வீசுகிறாய்

என் வரிகளின் பொருள் புரிந்தும் நீ
ஏன் மௌனமொழி பேசுகிறாய்

உள்ளதைத்தான் சொல்லுகிறேன் - அதில்
கள்ளம் என்ன காண்கிறாய் ?

உள்ளம் தனை கொள்ளை கொண்டும்
ஏன் இல்லை இல்லை என்கிறாய்

( என் இசையே இன்னிசையே )

இசையே நீ மட்டும் பேசிவிட்டால்
மொத்த குயில்களும் ஊமை ஆகும்

ஆசையை கொஞ்சி பேசிவிட்டால்
காதல்கிளிகள் வெட்கி சாகும்

இனி சொல்லவா ,சொல்லாமல் செல்லவா
என்னை அல்ல வா இல்லை புறம் தள்ள வா

உயிர் என்பதா ,கவிதை என்பதா
உன்னை உயிர் கவிதை என்பதா?

தேன் இசையே உன் பதிலை பெற
பல கவிதை தொடர்ந்து தொடுத்தேன்

மௌனத்தையே நீ பதிலாய் தந்தாய்
நான் மாற்று முடிவை எடுத்தேன்

இனி பாட்டுதான், பாடலின்கூட்டுதான்
உன் வாய் பூட்டுதான், இனி அதற்கு வேட்டுதான்

இனி மொட்டுதன் மலரும் பட்டு தான்
மலர வைக்கும் என் மெட்டு தான்


( என் இசையே இன்னிசையே )

எழுதியவர் : aasaiajiith (2-Nov-12, 5:34 pm)
பார்வை : 149

மேலே