என் வரிகளில் - ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (சூர்ய வம்சம் )

ரோசா பொண்ணு ,சின்ன ரோசா பொண்ணு
ஒன் பேர சொல்லும் ஆசை கண்ணு

ரோட்ல சுத்தினுந்தேன் சிங்கில்லா- என்
ஹார்ட்ல ஆய்ட்டே மிங்கில்லா

(ரோசா பொண்ணு )

ஊரெல்லாம் பேனர் கட்டி - ஒன்ன
பேமசு ஆக்கிடுவேன்
பிட்நோட்டிசு நூறடிச்சு - ஒன்
மனசை நான் தூக்கிடுவேன்

மய பெஞ்சாத்தான் நம்ம ரோடு நாஸ்தி - உன்னை
நெனிச்சாலே என் மன்சு நாஸ்தி தான்

பேக்கா நானும் சுத்தி வந்தேன் - என்னை
சோக்கு ஸ்டாரா மாத்தி தந்தே

( ரோசா பொண்ணு )

பின்னாடி பாக்கசொல்லோ
சொம்மா சோக்காதான் நீ தெரிரே

முன்னாடி எப்போ பாப்பேன்
எம்மான் நாலு கெழமைனு தெரியிலே

நெயளுக்கும் நெத்தி சுருங்காம உன்னை
பஸ் ஸ்டாண்டுல உக்காரவைக்கடுமா?

வேர்கடலை வாங்கி தந்திடுவேன் - வேறயாராண்டியும்
கடலைபோட்டா நொந்துடுவேன்

(ரோசா பொண்ணு )

எழுதியவர் : aasaiajiith (2-Nov-12, 5:42 pm)
பார்வை : 342

மேலே