கருத்தும் கவிதையும்

கவிக் குறிப்பு : என் "தென்றல் கடிதம்" கவிதையில்
கவி நண்பர்களின் கருத்தினில் எழுதிய சில
கவிதை வரிகள் :---


pulami ambika02-November-12 5:04 PM
தென்றல் காற்றின் இனிமையைப் போலவே இதமான வரிகள்...

அழகான படைப்பு சங்கரன் அய்யா அவர்களே...


பூவுக்கு வேண்டும்

தென்றல் காற்று

புலவனுக்கு வேண்டும்

செந்தமிழ் பாட்டு

நாவுக்கு வேண்டும்

நற்றமிழ் கவிதை

எழுத்துக்கு வேண்டும்

நம் இலக்கியத் தென்றல்

---------------------------------------------------------------------------

பிரதீப் 02-November-12 1:30 PM
Azhagu kavidhai ayya

கண்ணில் காணா அழகு

தென்றல்

கண்ணில் காணும்அழகுத் தென்றல்

பெண்கள்
---------------------------------------------------------------------------

ஆசைஅஜீத் 02-November-12 12:00 PM
காற்று விடு தூது நன்று !!!


காற்று வந்து தொட்ட போது

மலர் மலர்ந்தது

காற்று தயங்கி நின்றது

வீசாது நின்றதேனோ

என்று கேட்டது மலர்

உருவமில்லாத நான்

உன் அழகு கண்டு

அசந்து நின்றுவிட்டேன்

என்று சொன்னது காற்று.
---------------------------------------------------------------------------

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா02-November-12 11:55 AM
எழுத்தில் நுழைந்ததும் தென்றலை தீண்டினேன் இக்கவிதையின் மூலமாய்.. அருமை.

தென்றல் தீண்டினால்

தேன் மலருக்கு இன்பம்

கண்கள் தீண்டினால்

காதலில் இன்பம்

கவிஞன் தீண்டினால்

தென்றலுக்கும் இன்பம்

மலருக்கும் இன்பம்

காதலுக்கும் இன்பம்

இவற்றைத் தீண்டாது

வாழுதல்

துறவிக்கு இன்பம்

தீண்டித் தொட்டுத்

தழுவி வாழ்வதே

நமக்கின்பம்
--------------------------------------------------------------------------
priyaram02-November-12 11:32 AM
இளந்தென்றலைப்போல் இதமான கவிதை .....இனிமை அய்யா .....

இதயம் இளந் தென்றல் வீசும் இலக்கிய

மன்றம்.அங்கே கவிதை தென்றலாக....
---------------------------------------------------------------------------

சரண்யா 02-November-12 11:17 AM
காலையில் இதமான தென்றல் உங்கள் கவிதை வழியாய் ...

காலையிலும் தென்றல்
மாலையிலும் தென்றல்
வித்தியாசம்
வீசுதலில் இல்லை
உணர்தலில்
---------------------------------------------------------------------------

muraiyer6902-November-12 10:03 AM
அருமை, என்ன ஐய்யா காலையிலேயே காதலுக்கு தென்றலை தூது அனுப்பி விட்டீர்கள் - மு.ரா.

இது

கண்ணன் ராதைக்கு

அனுப்பிய குழலிசைத் தூது

கதிரவன் பூமிக்கு

அனுப்பிய எழில் ஒளித் தூது

கவிஞன் நீல வானுக்கு

அனுப்பிய கற்பனை தூது
---------------------------------------------------------------------------

தூ.சிவபாலன்02-November-12 9:41 AM
கவிதையும் தென்றல் காற்றாக எங்கள் மனதில் ........ வாழ்த்துக்கள்


மலர் மலரும்

தென்றலில்

மனம் மலரும்

கவிதையில்

விழி மலரும்

காதலில்

இதழ் மலரும்

புன்னகையில்

---கருத்துச் சொன்ன கவி நண்பர்களுக்கு நன்றி
கருத்தில் கவிதை தந்த தமிழுக்கு நன்றி
எழுதிட இடம் தரும் எழுத்திற்கு நன்றி

----அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-12, 6:21 pm)
பார்வை : 197

மேலே