சோதனை முயற்சிக்காக ஒரு கவிதை

சோதனை முயற்சிக்காக ஒரு கவிதை
பொம்மை என்றால்
என்னவோ ?
அவளுக்கு அத்தனை பிரியம்
என்ன தான் இருக்கின்றதோ
அந்த பொம்மையில்
அவள் இப்படி
உருகி உருகி ரசிப்பாள்
என முன்னமே அறிந்திருந்தால்
இறைவனிடம் எப்படியும்
மன்றாடி வாங்கி வந்திருப்பேன்
பொம்மையாக
ஓர் வரம் !!