!!!====(((மனிதம்)))====!!!

தலையிருக்க,
தலைகாட்டில் முடிகளும்
தழைத்திருக்க - அதனுள்
மூளையும் பொதிந்திருக்க - அதுவும்
பகுத்துணர்ந்து இயங்கச்செய்கிறது....
கண்ணிருக்க,
கருவிழியிருக்க - அதுவும்
காட்சிகளை பார்த்து
மனதில் பதிவிடுகிறது...
மூக்கிருக்க,
மூச்சுக்குழல் துளையிருக்க - அதுவும்
காற்றை சுவாசித்து
நறுமணத்தையும் நாற்றத்தையும்
பிரித்துணர்த்துகிறது...
வாயிருக்க - அதில்
நாவும் பல்லும் வீற்றிருக்க - அதுவும்
உணவை சுவைத்து
நயமாய் கவிகள் உரைக்கிறது...
கையிருக்க - அதில்
பத்துவிரல் பாங்கிருக்க - அதுவும்
அடிக்கவும் அணைக்கவும்
உழைக்கவும் உண்ணவும்
அயறா பணியை செய்கிறது...
காலிருக்க - அதுவும்
இரண்டிருக்க,
எனது லட்சிய பாதையில்
என்னை சுமந்து
நாளும் ஓயா நடக்கிறது...
உடலிருக்க, உயிரிருக்க - அதில்
சதையும் கூனும்
உணர்விருக்க..!
ஏதும் குறைவில்லை என்னிடம்...
பிறகு ஏண்டா மனிதா
என்னைமட்டும்
தாழ்த்தப்பட்டவனென்று
ஒடுக்கி ஓரத்தில் வீசுகிறீர்கள்...???
(''கூன்'' என்றால் ''குருதி'')