ஏழ்மைத் துளிகள் - கே.எஸ்.கலை
ஏழைகளுக்காக
கடவுளின் கண்ணீர்த்துளிகள்
ஒழுகும் குடிசை !
•
விரதம் இருப்பதின் பலன்
பிள்ளைக்கு பாடம் நடத்துகிறாள்
ஏழைத் தாய் !
•
வீட்டு நாய்
வீட்டுக்கு வருவது குறைகிறது
அயல்வீட்டில் பணக்காரன் !
•
ஆட்டு மடியை
ஆசையோடு பார்க்கிறாள்
பாலில்லாத் தாய் !
•
தெரு நாய்களுக்கும்
தெருக் குழந்தைகளுக்கும் போட்டி
விடுதியோர குப்பைத் தொட்டி !