///////////////////// தாய்ப்பால் தானம் //////////////////////

தன் குழந்தைக்கே
தாய்ப்பால் தந்திட
தயக்கம் கொள்ளும்
தாய்மார் மத்தியில் !

தன்னல மின்றி
தாய்ப்பால் தனையே
தானம் தந்த
தாயே உன்னை !

வாழ்த்தி எழுதிட
வரிகள் தேடி
வார்த்தைகள் இன்றி
வணங்கி நின்றேன் ......

அறிவிலி சிலரின்
அறிவுரை கேட்டு
அழகைப் பேணிட
அன்னை மாரே !

அறிவியல் மறந்து
அறிவினை இழந்து
தாய்ப்பால் தந்திட
தயக்கம் கொண்டீர் ........

பெற்ற குழந்தைக்கு
உற்ற மருந்தென்று
தாய்ப்பால் மிஞ்சிட
தரணியில் உண்டோ ?

எங்கும் எதிலும்
அடுத்தார் செயலில்
ஆர்வம் கொண்டே
அதன்பின் சென்றீர்.....

மேலை நாடுகள்
நாகரீகமே - நிதம்
மேன்மை என்று
மெச்சும் இனமே - இன்று

தாய்ப்பால் தன்னின்
உன்னதம் அறிந்து
தானம் தந்தவள்
மேலைப் பெண்ணே !

நல்லவை கண்டு
வாழ்ந்து விடு - நிதம்
தீயவை தன்னை
தீயில் இடு .

தானம் தந்திட
தாங்க வில்லை - உன்
தாய்மை தனையே
தாங்கி நின்று ,

தாய்ப்பால் தன்னை
தந்திட்டே உன்
சேயின்நலன் கரை
சேர்த்து விடு ........................................


( 325 லிட்டர் தாய்பாலை தானம் தந்து கின்னஸ் சாதனை புரிந்த அமெரிக்க பெண்மணி அலிசியா ரிச்மன் என்பவருக்காக இந்த கவிதை சமர்ப்பணம் )

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா..... (6-Nov-12, 5:14 pm)
பார்வை : 882

மேலே