வெற்றி வெகு தூரம் இல்லை ...!!!

விண்ணை பிளந்து
வெண்ணிலவை பறிப்போம் -அதில்
வர்ணம் தீட்டி சூரியனாய் பதிப்போம்
நமது விடியல் நம் கையில் -அவை
பிரகசமாவது நம் உழைப்பில்
வெளிச்சத்தில் வெற்றியை காணாதே- நீ
வெற்றிகண்டதின் மூலமாக
இவ்வுலகம் வெளிச்சம் அடையட்டும்
தற்பெருமை பேசாதே -உன்
தன்னலத்தை அது சுயநலமாக மாற்றலாம்
வெகு தூர பயணம் என நினையாதே-உன்
கால் சுவடினால் இப்பூமிக்கு பாதை கிடைக்கட்டும்
உதிரத்தை உழைப்பாக வை
வெற்றி உனது உயிரோட்டமாகும்
கற்பனை சுவர்களை உடைத்தெரி
தோல்வியை தூரபோடு - வெற்றியை
மனதில் ஊறப்போடு -இன்னல்களை
கரை எடுத்து பசும்பொன்களை
உனில் பதித்து பிரகாசமவாய் - இவ்வுலகில்
சகாப்தம் படைப்பாய் -மனிதா !!!